››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் கடற்படையினரால் கையளிப்பு

கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் கடற்படையினரால் கையளிப்பு

[2016/12/25]

இலங்கை கடற் படையினரால் கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் அண்மையில் (டிசம்பர்.23) யாழ்பாண மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்கத் திருத்ச்சபையிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த ஆலயம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் யாழ்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜச்ரின் போர்னாட் ஞானபிரகாசம் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாக கடற் படை ஊடக மையம் தெரிவிக்கின்றது.

குறித்த இச்செயற்றிட்டம் யாழ்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு அவர்களினால் 2017 ஆம் ஆண்டில் நடைபெரவுள்ள திருவிழாவுக்கு முன் பழைய தேவாலயதுக்காக ஒரு புதிய தேவாலயம் நிர்மாணித்து தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கினங்க கடற் படையினரின் நிதி உதவியுடன் இலங்கை கடற் படையினரால் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுனர் கெளரவ ரெஜினோல்ட் குரே, யாழ்பான மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு பத்தினாதர் ஜோசப்தாச் ஜெபரத்னம் அடிகளார்,நெடுந்தீவு பங்குதந்தை அருட்திரு அ ஜே அன்டனி ஜெயறஞ்நன் அடிகளார், யாழ்பான மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜச்ரின் போர்னாட் ஞானபிரகாசம் ஆன்டகை, யாழ்ப்பாணத்தின் இந்திய துணைத் தூதுவர் ஆ நடராஜன் அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபர், திரு என் வேதனாயகம் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பலவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

சிறிய தீவான குறிப்பிட்ட இத் தீவியை மீனவர்கள் கடலுக்கு சென்ற பின்னர் அவர்களின் மீன் பிடிக்கு பயன்படுத்தும் உபகரணங்களை திருத்துவதற்கு பயன்படுத்தினர். நெடுந்தீவில் இருந்து 10 கிமீ தூரத்தில் தனிமைப்படலால் உள்ள இந்த சிறிய தீவு 1.15 சதுர மைலக் கொண்டதகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்படும் பிரதான சமய வழிபாட்டு நிகழ்வுக்கு இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்