››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மேலும் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணிப்பு மேலும் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணிப்பு

மேலும் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணிப்பு

[2016/12/29]

மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற் படையினரினால் மேட்கொள்ளப்படும் பல்வேறு சமூக நலன்புரி செயற்றிட்டங்கள் ஊடாக ஹோரவபொத்தானை தேகெதிபோதான மற்றும் கலேவெல சில்வத்கம ஆகிய பிரதேசங்களிளும் மற்றும் திருகோணமலை கடற்படை விவசாய மற்றும் கால்நடை திட்டப்பகுதியிலும் நான்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதிதாக நிறுவப்பட்டன. குறித்த இந்நிலையங்கள் நேற்று (டிசம்பர் , 27) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதாக கடற்படை ஊடாக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இப்பிரதேசத்தில் 1,300 குடும்பங்கள் பாதுகாப்பான தூய குடிநீரை பெற்றுக் கொள்ளவுள்ளனர். மேலும், இந் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கடற்படை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மையம் நிர்மாணிப்பு பணிகளை மேட்கொள்வதோடு இதற்கான நிதி அனுசரணையை சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் ஒரு வருட காலதிதினுள் 78 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 35,800 குடுமபங்களும் மற்றும் 27,000 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்