››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புத்தாண்டில் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணம்

புத்தாண்டில் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணம்

[2017/01/05]

உதயமாகியுள்ள புத்தாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இலங்கை கடற்படையினரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், திறப்பனே மகானாம மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்ட 86வது குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்காக நேற்று (ஜனவரி. 04) திறந்து வைக்கப்பட்டது.

இவ்வாறு நிறுவப்பட்டுள்ள இக் குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் இப்பிரதேசத்தில் உள்ள 1,200 இற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 75 ஆசிரியர்கள் உட்பட இப்பிரதேசத்தைச் சேர்ந்த 750 குடும்பங்கள் பாதுகாப்பான தூய குடிநீரை பெற்றுக் கொள்ளவுள்ளனர். இந் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப்பணிகளை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான மையம் மேற்கொண்ட இதேவேளை இதற்கான நிதி அனுசரணையை பயர்பிளை மிஷன் சிங்கப்பூர் நிறுவனம் வழங்கியது.

மேலும், ஜனவரி. 03ம் திகதி அனுராதபுர மத்திய கல்லூரி மற்றும் ராஜங்கனை ஆகிய இடங்களிளும் ஜனவரி. 02ம் திகதி பதவிய மகேசன மகா வித்தியாலயம் மற்றும் மத்துகம மாவட்ட வைத்தியசாலை ஆகிய இடங்களிளும் இக் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. இதற்கான நிதி அனுசரணை சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியினால் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் ஒரு வருட காலதிதினுள் 86 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 40,600 குடும்பங்களும் மற்றும் 34,200 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.

மேலும், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் பணிப்புரையின் பேரில் இலங்கை கடற்படையினரின் நிதிஉதவியுடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த இத்திட்டமானது டிசம்பர் 2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்