››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் நாடுமுழுவதும் மரக்கண்றுகள் நடுகை

தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் நாடுமுழுவதும் மரக்கண்றுகள் நடுகை

[2017/01/06]

தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இலங்கை இராணுவத்தினரால் நாடுமுழுவதும் ஆயிரம் மரக்கண்றுகளை நடுகை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டு நிறைவடிவத்தினையொட்டி இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 13,200ற்கு மேற்பட்ட பல்வேறு வகையான தாவர வகையைச் சேர்ந்த மரக்கன்றுகள் கடந்த புதன்கிழமை (ஜனவரி.04) இடம்பெற்ற நிகழ்வின்போது நடுகை செய்யப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களினால் 5600 மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. மேலும், வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களினால் 2800 வல்லை மரக்கன்றுகள் படைத்தலைமையக வளாகத்தில் நடுகை செய்யப்பட அதேவேளை, கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் மா, எஹெல, வேம்பு, தேக்கு மற்றும் பனை உள்ளிட்ட 2100 மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்களும் இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை தமது வளாகத்தினுள் நடுகை செய்தனர். மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்கள் 2400 மரக்கன்றுகளை நடுகை செய்த அதேவேளை மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இருநூறு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்