››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

[2017/01/06]

மானிப்பாய் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினை அண்மையில் (ஜனவரி .02) இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த இந்நிகழ்வு 25வது விஜயபாகு காலாட்படையினருடன் 51வது பிரிவின் கீழ் உள்ள 511 பிரிகேட் படை வீரர்களினால் இப்பிரதேச மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வின்போது சுதுமலை பகுதியில் வசிக்கும் 26 மாணவர்கள் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை சீருடைகளைப் பெற்றுக்கொண்டதோடு, சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலையில் கல்விபயிலும் வலது குறைந்த மாணவி பீ. சதுர்ணவிக்கு மின்சார சக்கர நாற்காலி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கான நிதியுதவியினை தற்பொழுது கனடாவில் வசிக்கும் இலங்கையர் அன்பளிப்பு செய்துள்ளார். இதேவேளை இராணுவத்தினரால் இந் நிகழ்விற்கு வருகைதந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டன.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்