››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜனாதிபதியின் 2வது ஆண்டு பூர்த்திய முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சினால் விஷேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு

ஜனாதிபதியின் 2வது ஆண்டு பூர்த்திய முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சினால் விஷேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு

[2017/01/08]

ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதானியுமான அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள், ஜனாதிபதியாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளால் கொழும்பு கங்காராம விகாரையில் இன்று (ஜனவரி. 08) விஷேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

" நிலைபேறான யுகத்தின் மூன்றாவது ஆண்டு உதயம்" எனும் நிகழ்வுடன் இணைந்ததாக இடம்பெற்ற மேற்படி சமய நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிறி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் இங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளுக்கு கங்காராம விகாரையின் பிரதம விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய காலபோட ஞானிசார தேரர் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள் , பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் ஊழியகள் மற்றும் அமைச்சில் பணிபுரியும் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள், படைவீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்