››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடலோர பாதுகாப்பு படையினரால் எண்ணெய் கசிவு தடுப்பு

கடலோர பாதுகாப்பு படையினரால் எண்ணெய் கசிவு தடுப்பு

[2017/01/05]

எண்ணெய் மாசடைந்து நில்வள கங்கையில் கலப்பதனை தடுக்கும் வகையிலான உடனடி செயற்பாடுகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுக்கும் குழுவினரால் அண்மையில் (ஜனவரி .02) மேற்கொள்ளப்பட்டன.

இதன்பிரகாரம் வரல்ல வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தாங்கியிலிருந்து கசியும் பிடுமென் எமுல்சன் எனும் ஒருவகை திரவம் கலப்பதனை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தடுக்கும் குழுவினர் தடுத்துள்ளனர்.

மேலும், இலங்கை கடலோர பாதுகாப்பு படை பலகாவெல மற்றும் கத்துவ ஆகிய பகுதிகளில் ஆற்று நீரில் எண்ணெய் கலக்கும் அபாயத்தை அறிந்து அதனை மட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதிகளில் எண்ணெய் தடை வரம்புகளை இட்டுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்