››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள்

கடற்படையினரால் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள்

[2017/01/07]

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “அனர்த்த முகாமைத்துவம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த இரண்டாவது பயிற்சி அண்மையில் (ஜனவரி. 05) காங்கேசன்துறை உத்தர கப்பல் தளத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடற்படை அதிகாரிகளின் அனர்த்த முகாமைத்துவ அறிவு மற்றும் அனர்த்தத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்பவற்றில் அவர்களின் தொழில் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகள் பல நடாத்தப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இப் பயிற்சி நடவடிக்கையானது வட பிராந்திய கடற்படை கட்டளையதிகாரியின் மேற்பார்வையின் கீழ்
வெற்றிலைக்கேணி கடற்படை தளத்தின் கட்டளை அதிகாரி, தரை நடவடிக்கைகளுக்கான அதிகாரி மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் வட பிராந்திய பணிப்பாளர் ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்