››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படை மேலும் பத்து குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிப்பு

கடற்படை மேலும் பத்து குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிப்பு

[2017/01/10]

மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற் படையினரினால் மேட்கொள்ளப்படும் பல்வேறு சமூக நலன்புரி செயற்றிட்டங்கள் ஊடாக பத்து குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அண்மையில் ( ஜனவரி .10) நிறுவியுள்ளனர்.

இதன் பிரகாரம் கிரந்துரு கோட்டை பிரதேசத்திலுள்ள சுவர்ணபாலி மகளிர் ஜூனியர், சுவர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயம், வெலம்பள்ள மகா வித்தியாலயம், ரிதீமளியத்த, தளகொள்ளவெவ, பெளிகள்ள, ஸ்ரீ தர்மோதய பிரிவெனா ஆகிய இடங்களிலும் மற்றும் நிகவேஹெற பொல்பிடிகம ஆகிய பிரதேசங்களிலுமாக எட்டு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளதாக கடற்படை ஊடாக பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடற்படையினரின் பாவனைக்கா அனுராதபுர கடற்படை இல்லம் மற்றும் ஓயமடுவ கடற்படை தளம் ஆகிய இடங்களில் இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் நிறுவியுள்ளனர்.

குறித்த இத்திட்டமானது , இலங்கை கடற்படை தளபதியின் நேரடி வழிகாட்டலின் கீழ் கடற்படையினரால் விவசாய சமூகங்கள் மத்தியில் ஏற்படுகின்ற சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி இந் நிலையங்கள் பல நிறுவப்பட்டு வருவதுடன் இதற்கான நிதி அனுசரணையை சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, நாடு பூராகவும் 96 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியதன் மூலம் சுமார் 45,130 குடுமபங்களும் மற்றும் 40,350 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்