››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் 2477 பணியாளர்கள் காவல்துறையில் இணைப்பு.

சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் 2477 பணியாளர்கள் காவல்துறையில் இணைப்பு

[2017/01/10]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் உத்தரவிற்கு அமைய சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் 2477 பணியாளர்கள் காவல்துறையில் இன்று (ஜனவரி. 10) இணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புப் திணைக்கள பணியாளர்கள் வீடு மற்றும் நீதிமன்றம் ஆகிய இடங்களுக்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர்.

இதன்பிரகாரம் 5000 சிவில் பாதுகாப்புப் திணைக்கள பணியாளர்கள் வில்பத்து, அனுராதபுரம், ஹொறவபதாண, உகனை, கெபித்தி கொல்லேவ, வெலிஓயா, மஹோதய, அம்பாறை, புத்தளம், திருகோணமலை, கோமரங்கடவல, சேருவில, பொலன்னறுவை, மெதிரிகிரிய, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மொனராகலை ஆகிய காவல்துறை நிலையங்களுக்கு இணைத்துக்கொள்ள உள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்