››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவத்தினரால் பல்வேறு சமூகசேவை திட்டங்கள் முன்னெடுப்பு.

இலங்கை இராணுவத்தினரால் பல்வேறு சமூகசேவை திட்டங்கள் முன்னெடுப்பு.

[2017/01/11]

இலங்கை இராணுவ சமூகசேவை திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பணியகம் விவசாயிகளின் விவசாய மற்றும் பண்ணை அறிவை மேம்படுத்தும் வகையிலான பயிற்சி நிகழ்வொன்றினை அண்மையில் (ஜனவரி. 08) ஆரம்பித்த்து வைத்தனர்.

மேலும், விவசாயிகளின் அறிவை மேம்படுத்தும் வகையில் சரியான முறையில் பயிரிடல், பராமரித்தல், விளைச்சளை அதிகரித்தல், செலவினை குறைத்தல், அறுவடை செய்தல், சேமித்துவைத்தல், காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல், காபானிக் எருவினை பயன்படுத்தல், போன்ற பல பிரிவுகளில் பயிற்சி அமர்வுகள் மற்றும் களப் பயணங்களுடனான 60 நாட்கள் கொண்ட நீண்ட செயத்திட்டம் ஒன்றினை 14 விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயத்துறையில் பட்டம் பெற்ற இராணுவ அதிகாரிகள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட உள்ளன.

குறித்த இத்திட்டத்திற்கு இராணுவத்தினரால் முகாமைத்துவம் செய்து வரப்படும் பண்ணைகளான கண்டக்காடு, நாச்சிக்குடா, வெள்ளங்குளம், மாணிக் மற்றும் உடையார்கட்டு ஆகிய இடங்களில் நாடு முழுவதிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 223 கமநல தொழிலாளர்கள் மற்றும் திறமை மிக்க விவசாயிகளை பயிற்ச்சியில் ஈடுபடுத்த உள்ளனர்.

இதேவேளை, வவுனியா வெஹெரதென்ன பிரதேசத்தில் மூன்று புதிய கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இலங்கை இராணுவத்தின் 26 வது சிங்க றெஜிமென்ட் படைப்பிரிவினரினால் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த இத்திட்டத்திற்கான நிதி அனுசரனையினை ஸ்ரீ விஜயராமைய விகாரையில் தலைமை பதவி வகிக்கும் பம்பலபிடிய வெண் திருகுனாமலைய ஆனந்த அனுநாயக தேரோ அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்