››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு மேலும் பல உதவிகள்

இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு மேலும் பல உதவிகள்

[2017/01/12]

அண்மையில் (ஜனவரி.10) இலங்கை இலகு காலாட்படையை சேர்ந்த 14 (தொண்டர்) இராணுவத்தினரால் சம்பத்நுவர பிரதேசத்திலுள்ள “ரணவிரு பியச” எனும் கிராமத்தில் பாவனையிலில்லாத கட்டிடமொன்றை புதுப்பித்து முன்பள்ளி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இக்கிராமத்தின் முன்பள்ளி தேவையினை உணர்ந்து பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த கட்டிடத்தினை பாலர் பாடசாலையாக மாற்றி அமைத்துள்ளனர்.

இதேவேளை, யாழ்பாணத்தில் 67 பாடசாலைகள் ஜனவரி . 07ம் மற்றும் 8ம் திகதிகளில் இலங்கை இராணுவத்தின் 51, 52 மற்றும் 55வது படைபிரிவினர் சுத்தம் செய்வதற்கான சிரமதானப்பணியினை மேட்கொண்டுள்ளனர். குறித்த பணியினை மேட்கொள்வதற்காக 49 அதிகாரிகள் மற்றும் 927 இராணுவப்படையினர் பங்குபற்றினர்.

மேலும், அண்மையில் (ஜனவரி . 10) நுவரெலியா பீதுறுதாலகால மற்றும் ரோஷித பண்ணை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்படுத்த இலங்கை இராணுவத்தினர் உதவியுள்ளனர். குறித்த தீயினை அணைப்பதற்காக மத்திய - பாதுகாப்பு படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவு மற்றும் 19வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்