››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைப்பு

[2017/01/18]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் களனி பொல்லேகள்ளயிலுள்ள மானல் வத்த மஹா விகாரையில் தர்மச்சக்கர பிரவர்த்தன திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (ஜனவரி .18) கலந்துகொண்டார்.

குறித்த இந்நிகழ்வின் விஷேட அதிதியாக சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய அவர்களும் கலந்து சிறப்பித்தார். இதேவேளை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்

குறித்த புத்தர் சிலையானது சீனா ஹ்வா பியோ லேன்ட் போதனை பரப்புகை அமைப்பின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய வூ டாவ் தேரர் அவர்களின் ஆதரவில் நிர்மாணிக்கப்பட்டதாகும். 40 அடிகளைக் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட இச்சிலையானது 5 அடுக்கு மாடிகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய சிலையாக காணப்படுகின்றது.

குறித்த இந்நிகழ்வினை முன்னிட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் சிலையின் மாதிரி ஞாபகார்த்த பிரதிகள் ஒன்றினையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வின்போது வணக்கத்துக்குரிய மஹா சங்க, அமைச்சர்கள், விஷேட விருந்தினர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்