››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சுதந்திர தின வைபவத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

சுதந்திர தின வைபவத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

[2017/02/03]

நாளைய தினம் (பெப்ரவரி, 04) கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொண்டாடப்படவுள்ள 69வது சுதந்திர தின வைபவத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன. இவ்வருட சுதந்திர தின நிகழ்வு “தேசிய ஐக்கியம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.

சுதந்திரதினத்தை முன்னிட்டு சர்வமத நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேற்படி சமய நிகழ்வுகள் கொழும்பு பொல்வத்த தர்மகீர்த்திராமய விகாரை, திம்பிரிகஸ்யாய புனித தெரேசா தேவாலயம், கொழும்பு பெரிய பள்ளிவாயல், கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் மற்றும் பொரெல்ல புனித லூக் தேவாலயம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளன. மேலும், சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்றய தினம் சுதந்திர சதுக்கத்தில் விஷேட பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, சுதந்திர தின அணிவகுப்பில் இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 183 அதிகாரிகள் மற்றும் 3973 வீரர்களும் , கடற்படையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி 32 அதிகாரிகள் மற்றும் 878 கடற்படை வீரர்களும், விமானப்படையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி 70 அதிகாரிகள் மற்றும் 1055 விமானபடை வீரர்களும், பொலிஸ் திணைக்களத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18 அதிகாரிகள் மற்றும் 470 பொலிசாரும், விஷேட அதிரடிப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 37அதிகாரிகள் மற்றும் 496 அதிரடிப்படை படைவீரர்களும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி 24 அதிகாரிகள் மற்றும் 684 சிவில் பாதுகாப்பு படை வீரர்களும் மற்றும் தேசிய மாணவர் படையணினைப் பிரதிநிதித்துவப்படுத்தி 100 வீரர்களுமாக மொத்தம் 8000 படையினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், சுதந்திர வைபவத்தின் போது விஷேட பரசூட் கண்காட்சி இடம்பெறவுள்ள அதேவேளை தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்