››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரினால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்

இராணுவத்தினரினால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்

[2017/02/14]

நாட்டின் பல பாகங்களில் அண்மையில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் 12வது பிரிவானது நுகேகொட லயன்ஸ் கிளப் மற்றும் சமுத்ர தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஹம்பாந்தோட்ட கெண்டகஸ்மான்கட கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இதேவேளை, யாழ் முலவை கலவத்தி செபமாலை மாதா ஆலயத்தின் விசேட வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர், மைலிட்டி கண்ணகி அம்மன், முருகன் மற்றும் குளத்தடி அம்மன் கோவில்களில் இடம்பெற்ற தைபூச திருவிழா பூஜைகள் கலந்து கொள்ளவென வந்த பகதர்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். மேலும், பக்தர்களுக்கான போக்குவரத்து, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் என்பவற்றையும் மேற்கொண்டனர்.

அத்துடன் இராணுவ அதிகாரிகளினால் புதுக்குடியிருப்பு பிராந்திய வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சுமார் 700,000.00 ரூபா பெறுமதியான புதிய கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையனை தொகுதிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்