››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

கடற்படையினரால் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

[2017/03/17]

இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம், யாழ்பாணம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளன. இதற்கமைய கடற்படையின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி மையத்தினால் மகாவிலாச்சிய எலபத்கம ஸ்ரீ சோபித விகாரை, சம்பத்நுவர ஜனகபுர ரஜமஹா விகாரை, பதவிய மதவாச்சி ரன்மடுவ ரஜமஹா விகாரை, தலாவ கரகஹவெவே விகாரை, கீரிமலை பூனேவ மகா வித்தியாலயம், அரலகன்வில, புலன்குலம, மற்றும் நுவரகம பிரதேச சபைகுட்பட்ட பஹலகம ஆகிய இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசங்களில் சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி, புத்தசாசன அமைச்சு, இலங்கை கடற்படையின் சமூக பொறுப்பு நிதியம், இலங்கை சுங்கத்திணைக்கள விளையாட்டு கழகம், வடமத்திய மாகனசபை, ஆகியன குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம் குறித்த நிலையங்கள் மூலம் சுமார் 3700 குடும்பங்கள் மற்றும் சுமார் 1200 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் நேரடியாக பயன்பெறவுள்ளனர்.

இதுவரை நாடு பூராகவும் 162 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 76,925 குடும்பங்கள் மற்றும் 60,000 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்