››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அதி வண. தவுல்தென ஞானீஸ்ஸர மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து ஜனாதிபதி அவர்களின் இரங்கல்

[2017/04/04]

ஶ்ரீ சம்புத்த சாசனம் மற்றும் இலங்கை பிக்குகள் சாசனம் என்பவற்றை தனது அபரிமிதமான ஞானத்தினாலும், தர்ம சாஸ்திரங்கள் பற்றிய அறிவினாலும் வளப்படுத்தி வந்த ஶ்ரீ லங்கா அமரபுர மகா விகாரையின் அதி வண. தவுல்தென ஞானீஸ்ஸர மகா நாயக்க தேரரின் மறைவு குறித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

அன்னாரது நல்லடக்க நிகழ்வுகளை பூரண அரச மரியாதையுடன் நிகழ்த்துவதற்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், அந் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுமாறு புத்தசாசன அமைச்சருக்கும், உரிய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவ்வாறே அதற்குரிய அனைத்து செலவுகளையும் அரசினால் மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதி வண. தவுல்தென ஞானீஸ்ஸர மகா நாயக்க தேரரின் இறுதி நிகழ்வுகள் இம் மாதம் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் சந்திப்பு இன்று பிற்பகல் உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் தலைமையில் உள்நாட்டலுவல்கள் அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்