››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள்

பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள்

[2017/04/06]

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் புதுவருட விஷேட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஏப்ரல் .06) திறந்துவைத்தார்.

அமைச்சில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் நலன்கருதி எதிர்வரும் புதுவருடதினத்தினை முன்னிட்டு நியாயமான விலையில் மரக்கறிவகைகள், உலருணவுப்பொருட்கள், பாலுட்பத்திப்பொருட்கள், ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை, தமிழ் சிங்கள புதுவருட தினத்தில் இடம்பெற இருக்கும் விளையாட்டு நிகழ்வை முன்னிட்டு ஏஐஏ இலங்கை காப்புறுதி கம்பனி 400,000/= ரூபா நிதியுதவி மற்றும் 650 தொப்பிகளையும் வழங்கியுள்ளது நன்கொடையாக வழங்கப்பட்ட குறித்த காசோலை இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது நிறுவனத்தின் பிரதிநிதியால் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

புதுவடுட விஷேட சந்தையின் போது சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி வசந்தா குணவர்த்தன அமைச்சின் உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அமைச்சில் சேவையாற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்தனர்.

 
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்