››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் மீதொட்டமுல்ல குப்பை மேடு பொலிதீன் மூலம் உறையிடப்பட்டுள்ளது

இராணுவத்தினரால் மீதொட்டமுல்ல குப்பை மேடு பொலிதீன் மூலம் உறையிடப்பட்டுள்ளது

[2017/04/24]

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, இராணுவ பொறியியல் படை பிரிவினர் குறித்த பகுதியினை பாதுகாப்பு கருதி பொலிதீன் உறையினால் (ஏப்ரல் .22) உறையிட்டு மறைத்துள்ளதாகவும் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பதிக்கப்பட்ட மீதொட்டமுல்ல ஸ்ரீ ராஹுல வித்தியாலய திருத்த வேலைகளில் இலங்கை பொறியியல் படை மற்றும் பொறியியல் சேவை படைப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இப்பிரதேசத்தின் முன்னேற்றம் கருதி குறித்த பகுதியின் நீர் மட்டத்தினை அளவீடு செய்வதற்காக இலங்கை பொறியியல் படைப் பிரிவின் விஷேட நிபுணத்துவம் வாய்ந்த வீரர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

அண்மையில் (ஏப்ரல் . 14) மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்