››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முள்ளிக்குளத்தில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் 100 ஏக்கர் காணி கடற்படையினரால் விடுவிப்பு

முள்ளிக்குளத்தில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் 100 ஏக்கர் காணி கடற்படையினரால் விடுவிப்பு

[2017/04/30]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள குடியமர்த்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக முள்ளிக்குளம் பகுதியில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் சுமார் 100 ஏக்கர் காணிகள் இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமேல் கடற்படை தளத்திற்கு விஜயம் மேற்கொடிருந்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை முள்ளிக்குள பிரதேச மக்கள் சந்தித்தபோது அவர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் காணி விடுவிப்பது தொடர்பாக கடற்படைத்தளபதி உறுதியளித்தார்.

குறித்த கலந்துரையாடலின் பயனாக முள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேறி வசித்துவரும் பொதுமக்களின் 100 ஏக்கர் விவசாயக்காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை உறுதியளித்துள்ளது.

மேலும், உடனடி மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படை தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இப்பகுதியல் தமது சேமலாப, நலன்புரி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள். சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்