››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கண்ணிவெடிகளை கண்டறியும் நாய் சிரா யான்கீ தாயாகம் திரும்பியது

கண்ணிவெடிகளை கண்டறியும் நாய் சிரா யான்கீ தாயாகம் திரும்பியது

[2017/05/05]

அண்மையில் (மே .02) சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக வடக்கின் கண்ணிவெடிகள் உள்ள பகுதியில் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்களுடன் கண்ணிவெடிகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுவந்த சிரா யான்கீ எனும் நாய் தனது தாயாகம் திரும்பியது. கடந்த மாதம் (ஏப்ரல்) 30ம் திகதி மெடகொட பிரதம களப் பொறியிலாளர் தலைமையகத்தில் இடம்பெற்ற சிறு வைபவத்தின்போது குறித்த சேவையில் ஈடுபத்தப்பட்ட நாய் அமெரிக்காவை தளமாகக்கொண்ட மார்ஷல் மரபுரிமை நிறுவன திருமதி கிம்பேர்லி மெக் கேஸ்லாந்து அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நாயுடன் சேவையாற்றிய இராணுவத்தின் பொறியியல் படை பிரிவின் கோப்ரல் டிகேடி. ராஜபக்ச புதுக்குடியிருப்பின் மாந்தீவு, அனந்தபுரம், வெள்ளமுல்லிவாய்க்கால், மகமிலன்குலம், கும்புறுமுல்ல மற்றும் கோமான்துறை ஆகிய பிரதேசங்களிலும் சுமார் 16 மிதிவெடிகள், ஒரு கைக்குண்டு, வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 3 ராக்கெட் வெடிகுண்டுகள் என்பவற்றை மீட்டெடுக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிரா 2011ம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் இராணுவ கண்ணிவெடி அகற்றும் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்