››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சூரிய சக்தியில் செயற்படும் மின்சார வேலி சூரியவெவவில் நிர்மாணம்

சூரிய சக்தியில் செயற்படும் மின்சார வேலி சூரியவெவவில் நிர்மாணம்

[2017/05/10]

சூரியவெவ பிரதேசத்தில் சூரிய சக்தியில் செயற்படும் மின்சார வேலியை இலங்கை கடற்படை நிர்மாணித்துள்ளது. குறித்த இம்மின்சார வேலி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைவாக குறித்த இச்செயற்றிட்டம் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிபுணத்துவ பிரிவினால் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியான சமூக நலத்திட்டங்களின் ஒருபகுதியாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் அப்பகுதியில் நிலவி வரும் காட்டு யானைகள் மற்றும் கிராம வாசிகளிடையே நிலவி வரும் முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் காட்டு யானைகளின் அட்டகாசங்களில் இருந்து மனித உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பது என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்