››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

[2017/06/03]

கிளிநொச்சியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க கல்வி உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு கிளிநொச்சி பாதுகாப்புப் படைவீரர்கள் அனுசரணை வழங்கியுள்ளனர். நெலும்பியச கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வில் மல்லாவி,பூனேரி மற்றும் விஸ்வமடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி உபகரணங்கள் அடங்கிய பொதிகளைப் பெற்றுக்கொண்டனர். குறித்த இத்திட்டத்திற்கான நன்கொடை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் கரியகரவான அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய குட்னெஸ் அறக்கட்டளை நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

குறித்த இந்நிகழ்வில் ரூபா 3500.00 பெறுமதியான நூறு பொதிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. பயிற்சி கொப்பிகள், உபகரணங்கள், பாடசாலை பைகள் என்பனவற்றுக்கு மேலதிகமாக ரூபா 1000.00 பெறுமதியான பணத்தொகையினையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் கரியகரவான,அதிகாரிகளின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன, குட்னெஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ஆனந்த ஜெயவர்த்தன, கல்வி நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்