››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/05]

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவ வீரர்களுக்கு அமெரிக்க அரசு தனது ஒத்துழைப்பு மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திரு. அடுல் கேஷப் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌவர ருவன் விஜேவர்தன அவர்களுடன் அமைச்சில் இன்று (ஜூன், 05) இடம்பெற்ற விஷேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின்போது, பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் முப்படையினர் பிரதான பாத்திரமாக செயற்பட்டதாக தெரிவித்ததுடன் இரவு வேளைகளில் கஷ்ட மற்றும் தூர இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைக்கு உபகரணங்கள் மற்றும் தொழிநுட்ப வசதிகள் என்பவற்றுக்கான தேவைப்பாடு நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அமைச்சரின் வேண்டுகோளுக்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்க அரசு பணியில் ஈடுபடும் முப்படையினருக்கு தேவையான உபகரணங்கள், தொழிநுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவ உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அமெரிக்க தூதாரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் ஜாகோப் இங்லிஷ் மற்றும் சிரேஷ்ட்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்