››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு ” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு ” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை

[2017/06/14]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு – இலங்கை மற்றும் தெற்காசியாவில் அதன் விளைவுகள்” என்பவற்றையும் தெளிவு படுத்தும் வகையில் விஷேட கலந்துரையாடல் மற்றும் விரிவுரை ஒன்று தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் தலைமையகமான பத்தரமுல்ல சுஹுறுபாய கேட்போர் கூடத்தில் இன்று (ஜூன், 14) இடம்பெற்றது.

காலநிலை மாற்றத்தால் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்கள் பற்றி இங்கு வருகை தந்தோருக்கு விளக்கமளிக்கும் வகையிலும் அவை தொடர்பான அறிவினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசிபிக் பிரதிநிதி மற்றும் பொதுநலவாய இளைஞர் காலநிலை மாற்ற வலையமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனைப் பிரதிநிதியயுமான, செல்வி அனோகா அபேரத்ன அவர்களால் விசேட விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

காலநிலை மாற்றம் தொடர்பாக உரை நிகழ்த்தும்போது அதன் தாக்கங்கள், அதனை எதிர்கொள்வது மற்றும் காலநிலை மாற்றத்திற்கான காரணிகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார். அத்துடன் உலகளாவியரீதியில், பிராந்தியங்ககளில் குறிப்பாக இலங்கையில் பொதுவாக இடம்பெறுகின்ற இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, நிகழ்வை நினைவு கூறும்வகையில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு அசங்க அபேகுனசேகர அவர்களால் செல்வி அபேரத்ன அவர்களுக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வியியலாளர்கள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், விஷேட அதிதிகள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்