››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார நிகழ்வு

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார நிகழ்வு

[2017/06/15]

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் கலாச்சார நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுன்,14) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

வருடா வருடம் இடம்பெறும் குறித்த கலாச்சார நிகழ்வில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றினால் அரங்கேற்றப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் அரங்கத்தை அலங்கரித்தன. அத்துடன் வெளிநாட்டு பாரம்பரியங்களை பறைசாற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அரச அதிகாரிகள், வெளிநாட்டு அதிதிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், விஷேட அதிதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அங்கவீனமுற்ற படைவீரர்கள், முப்படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்