››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜனசக்தி – தேசிய விருது வழங்கும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

ஜனசக்தி – தேசிய விருது வழங்கும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/06/16]

நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாகத்தில் இடம்பெற்ற 2017ம் ஆண்டிற்கான ஜனசக்தி – தேசிய விருது வழங்கும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார். குறித்த இந்நிகழ்வில் சபாநாயகர் கௌரவ கருஜயசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஆபத்தை எதிர் நோக்கிய சந்தர்பங்களில் உதவிய தானாக முன்வந்து உதவியளித்தவர்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெறும் வகையில் 23வது தடவையாக இடம்பெறும் இந்நிகழ்வை சிவில் பிறேவரி மற்றும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் 12 பேர் பிறேவரி விருதினை பெற்றுக்கொண்டனர். இதில் மட்டக்களப்பு கடனீரேரி பகுதியில் நான்கு பேரின் உயிர்களை காப்பாற்றிய விமானப்படை வீரரான நவீன் தனுஷ்க பண்டாரவிற்கும் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விருதுகள் மற்றும் பதக்கங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர், அதிதிகள், போட்டி ஏற்பட்டாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்