››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் கலந்துரையாடல்

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் கலந்துரையாடல்

[2017/06/16]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் 'இலங்கையில் இயற்கை அனத்த அச்சுறுத்தலைக் தணித்தல் மற்றும் நிர்வகித்தல்' எனும் தொனிப்பொருளில் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் தலைமையில் இன்று (ஜூன், 16) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் அனர்த்தங்கள் சார்பான அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைத்து நாட்டில் ஏற்படுகின்ற அனர்த்தங்களை தணித்தல் மற்றும் குறைப்பது தொடர்பாக கலந்துரையாடல் இதன் பிரதான நோக்கமாக காணப்பட்டது. இதில் பிரதானமாக அனர்த்தங்களை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை முறையினை அமுல்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்கள் அமைத்து குடியிருப்பதுடன், காடழிப்பு மற்றும் மண் அகழ்வு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் மற்றும் அதற்காக அமுல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் அனர்த்தங்கள் ஏற்படுதை குறைப்பது தொடர்பாக பொறியியல்துறை சார்ந்தவர் என்ற வகையில் தனது அனுபவங்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர், நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்