››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

இராணுவ அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/06/18]

தியத்தலவாயிலுள்ள இலங்கை இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற 83வது நிரந்தர ஆட்சேர்ப்பு மற்றும் 57வது தொண்டர் ஆட்சேர்ப்பு சேர்ந்த கேடட் அதிகாரிகள் தங்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (ஜூன், 17) கலந்து சிறப்பித்தார்.

இங்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக அங்கு உள்ள இராணுவ நினைவு துாபிக்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் அமைச்சர் அவர்களை இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் வரவேற்றார்.

இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள், கடந்த காலங்களில் இராணுவத்தினர் மேற்கொண்ட சேவைகள் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்ததுடன், தேசத்தை பாதுகாக்க தமது உயிர்கள் மற்றும் கால்களை தியாகம் செய்த படை வீரர்களுக்கு தனது மரியாதை மற்றும் கௌரவத்தையும் தெரிவித்தார். அத்துடன் கடந்த காலங்களில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்திக்கொள்வது எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்க அவை உத்வேகம் அளிக்கும் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.


புதிதாக அதிகாரம் அளிக்கப்பட இராணுவ அதிகாரிகள் என்றவகையில் இராணுவத்தின் பெருமையை பாதுகாத்தல் மற்றும் தாய்நாட்டுக்காக சேவை செய்வதை முழு மனதோடு தாங்கள் செயற்படுத்தவேண்டும் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை வெள்ள அனர்த்தத்தின் போது இராணுவ வீரர்கள் மேற்கொண்ட சேவைகளை பாராட்டியதோடு, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலின்கீழ் அரசாங்கம் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவதில் எப்போதும் கவனம் செலுத்துவதாகவும், நல்லிணக்கத்திற்கு தேசிய பாதுகாப்பு எப்போதும் மிக முக்கியமானதாக காணப்படுவதாகவும் அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் அவர்களினால் இம்முறை பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் 83 நிரந்தர ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 36 கெடட் அதிகாரிகளுக்கும் 57வது தொண்டர் ஆட்சேர்ப்பைச் சேர்ந்த 24 கெடட் அதிகாரிகளுகுமாக மொத்தம் 60 கெடட் அதிகாரிகளுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படியான வாளை வழங்கி வைத்து அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை, பயிற்சியினை முடித்து வெளியேறும் கேடட் மாணவர்கள் “இயற்கை அனர்த்தம், பேரழிவு என்பன உலக அமைதி மற்றும் பாதுகாப்பு மீது செலுத்தும் தாக்கம்” எனும் கருப்பொருளில் நேற்று (ஜூன், 16) முவைத்த காட்சிப்படுத்தல் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், இலங்கை இராணுவ கல்லூரியின் கொமடான், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், விஷேட அழைப்பின்பேரில் வருகைதந்தோர் மற்றும் புதிதாக நியமனம் பெரும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்