››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவம் குப்பைகளை அகற்றுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில்

இராணுவம் குப்பைகளை அகற்றுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில்

[2017/06/19]

அனுமதியற்ற மற்றும் முறையற்ற விதத்தில் குப்பைகளை அகற்றுவதை கண்காணித்து அது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல் மற்றும் முறையான விதத்தில் குப்பைகளை சேகரிப்பதனை அவதானித்தல் போன்ற நடவடிக்கைகளில் தற்போது இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரோஷன் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குப்பைகளை சேகரித்து எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும், முறையற்ற விதத்தில் குப்பைகளை இடும் இடங்களை அவதானித்து அது தொடர்பான (நகரசபை / பிரதேச சபைக) அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நடவடிகையில் ஈடுபடுவார்கள் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதன் பின்னர் குப்பைகளை சேகரித்தல் மற்றும் அகற்றும் நடவடிக்கையினை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், அனுமதியற்ற மற்றும் முறையற்ற விதத்தில் குப்பைகள் இடுவோரை கைது செய்ய காவல்துறையினருக்கு ஒத்துளைப்பு வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்