››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமெரிக்க கடற்படைக் கப்பல் “லேக் எரை” நாடு திரும்பியது

அமெரிக்க கடற்படைக் கப்பல் “லேக் எரை” நாடு திரும்பியது

[2017/06/20]

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண பணிகளினை மேற்கொள்ளும் வகையில் இம்மாதம் 11 ம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் “லேக் எரை” நேற்று (ஜுன் 19) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது
குறித்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வழியனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த காலங்களில் சீரற்ற காலநிலையினால் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “லேக் எரை” கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து நிவாரண உதவிகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மேலும், அனர்த்த நிலைமைகளின் போது அதிலிருந்து தம்மை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட பல்வேறு நிகழ்வுகளில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து குறித்த வீரர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்