››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உயிரிழந்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் ஆகியோருக்கு வட்டியில்லா கடனுதவி

உயிரிழந்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் ஆகியோருக்கு வட்டியில்லா கடனுதவி

[2017/06/21]

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரின் தலைமையில் போரின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரகளுக்கு வட்டியில்லா வீடமைப்பு கடனுதவியளிக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன்,21) இடம்பெற்றது. குறித்த இந் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது ரூபா பதினைந்து மில்லியன் பெறுமதியான வீட்டுக்கடன் 19 இராணுவ வீரர்கள், 14 கடற்படை வீரர்கள், 12 விமானப்படை வீரர்கள் மற்றும் 05 சிவில் பாதுகாப்புபடை வீரர்கள் அடங்கலாக மொத்தம் 50 படைவீரர்களுக்கு வழங்கிவைப்பட்டது. குறித்த கடனுதவி திட்டம் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் முன்னெடுக்கபடுகின்றது. மேலும் இத்திட்டம் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரகள் ஆகியோர்களுக்காக 22 கட்டங்களாக முன்னெடுக்கப்படுகிறது. இறுதியாக 2015ம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட 21வது கட்டத்தில் சுமார் 48 பயனாளிகள் குறித்த வீடமைப்பு கடனுதவியினைப் பெற்றுக்கொண்டனர்.

குறித்த வீடமைப்பு கடனுதவித்திட்டம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க அம்மையாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் முதற்கட்டத்தில் சுமார் 100 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு ரூபா 150,000.00 வீதம் சுமார் பதினைந்து மில்லியன் ரூபா கடனுதவியாக அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முப்படைத்தளபதிகள், சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக்கா, முப்படைகளினது சேவா வனிதா பிரிவுகளின் தலைவிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்