››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை மருத்துவக்குழு உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை மருத்துவக்குழு உதவி

[2017/06/23]

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணாமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி இலங்கை விமானபடையின் மருத்துவகுழு இரு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ததது. குறித்த மருத்துவ முகாம்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆயகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மருத்துவ முகாமில் வெளி நோயாளர் சிகிச்சை, விஷேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை, சிறியளவிலான அறுவைச்சிகிச்சை, அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் என்பன இடம்பெற்றன.

1000இற்கு மேற்பட்ட நோயாளர்கள் பங்குபற்றிய இம்மருத்துவ முகாமில் கொழும்பைச் சேர்ந்த ஐந்து பிரபலமான மருத்துவ நிபுணர்கள் உட்பட 35 வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ அதிகாரிகள், விமானப்படையின் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்