››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யுத்த வீரர்களுக்கான நலன்புரி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு

யுத்த வீரர்களுக்கான நலன்புரி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு

[2017/07/05]

யுத்த வீரர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி நடவடிக்கைகளை அவதானிக்கும் வகையில் இடம்பெற்ற விஷேட நிகழ்வு ஒன்றில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்தன அவர்கள் நேற்று (ஜூலை, 04) கலந்து சிறப்பித்தார்.

ரணவிரு சேவா அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இங்கு உரைநிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் அவர்கள், யுத்த வீரர்கள் எதிர் நோக்குகின்ற கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளை தான் அறிந்துகொள்வதுடன் அவற்றுக்கு தீர்வுகாண்பதாகவும் தெரிவித்தார். சிலர் அரசியல் இலாபம் பெரும் நோக்கில் யுத்தவீரர்களை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும், மற்றும் அவர்களின் நலன்புரிகளில் கவனம் செளுத்துவதில்லை என்பதாகவும், அரசின்மீது அதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைகின்றனர். அனால் ஜனாதிபதி மற்றும் அரசு, யுத்த வீரர்களின் அனைத்து நலன்புரி நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசுக்கு யுத்த வீரர்களை கஷ்டப்படுத்தி நோகடிக்கும் எண்ணம் இல்லை என்றும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் யுத்த வீரர்களின் நலன்புரி நடவடிக்கை தொடர்பான விடயங்களில் தான் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை வழங்குவதாகவும் அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வு “யுத்த வீரர்கள் நலன்புரி அமைப்பு” அங்கத்தவர்களின் தேவைகளை அவதானிக்கும் வகையில் ரணவிரு சேவா அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின்போது அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்காக ஒருதொகை செயற்கை கால்கள் மற்றும் ஊன்றுகோல்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் யுத்த வீரர்களின் குடுப்பத்தைச்சேர்ந்த 32 மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இதன்போது யுத்த வீரர்களுக்கு விருசர வரப்பிரசார அட்டையும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர், ரணவிரு சேவா அதிகாரசபை அதிகாரிகள், சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், பெரும் எண்ணிக்கையான யுத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்