படையினருக்கான எளிகேட்டர் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு
[2017/07/06]

அண்மையில் (ஜூலை, 05) இலங்கை இராணுவ கொமாண்டோ மற்றும்
விஷேட படைப்பிரிவினர், இலங்கை கடற்படையின் கடல்சார் படைப்பிரிவுடன்
ஒன்றிணைந்து மேற்கொண்ட எளிகேட்டர் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக
இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகரை கடலோரத்தில் இடம்பெற்ற குறித்த பயிற்சியில் 100
இலங்கை கடற்படையின் கடல்சார் படைப்பிரிவினர், 30 கொமாண்டோ மற்றும் 30 விஷேட
படைப்பிரிவினர் பங்குபற்றினர். கடல் மற்றும் தரை ஆகிய இரு இடங்களிலும்
எதிரிகளால் மேற்கொள்ளப்படும் அச்சுருத்தர்களை எதிகொள்ளும்வகையில்
இப்பயிற்சியில் ஈடுபட்ட படையினரை தயார்நிலையில் வைத்திருத்தல் குறித்த
பயிற்சியின் நோக்கமாககும்.
மேலும் இப் பயிற்சிக்காக தரை இறங்கும் கப்பல் 821 மற்றும்
4 கரையோர ரோந்து கப்பல் ஆகியனவும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
|