››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு

இராணுவ வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு

[2017/08/03]

பாதுகாப்பு அமைச்சின் ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அலுவலகத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அத்தியவசிய மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இராணுவ வைத்தியசாலையில் இன்று (ஓகஸ்ட், 03) இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்திய சாலையில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் ஊடக செயலாளர் திரு. ரகித்த ராஜபக்ஷ அவர்களின் நிதியனுசரனையுடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அத்தியவசிய மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்புகளுக்கான அதிகாரி திரு. திலின வெவெல்பணவ அவர்களும் கலந்து கொண்டார். இதனோடு இணைந்ததாக பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு த்தியவசிய மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்(பாதுகாப்பு), திரு. சரத் குமார, திருமதி மாலா ராஜபக்ஸ, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அவர்களின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்