››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

செனகல் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

செனகல் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/08/03]

இலங்கை மற்றும் புதுடில்லிக்கான செனகல் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 02) சந்தித்தார்.

இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதுடன், கேர்ணல் மாலிக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் அவர்களுக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றன. மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இச்சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நெவில் வீரசிங்க அவர்களும் கலந்துகொண்டார்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்