››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நாடு பூராகவும் 240க்கும் அதிகமான குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன

நாடு பூராகவும் 240க்கும் அதிகமான குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன

[2017/08/04]

இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் கல்நேவ கந்துலுகமுவ வித்தியாலயம், நேகம நேகம முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் முல்லைதிவு துனுக்காய் கிராமம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட மேலும் 03 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக நேற்று (ஆகஸ்ட், 02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்துலுகமுவ வித்தியாலத்தில் நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் இப் பாடசாலையின் 431 மாணவர்கள் மற்றும் 378 குடும்பங்களும், நேகம முஸ்லிம் வித்தியாலய நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் 700 மாணவர்களும் 325 குடும்பங்களும் சுத்தமான குடிநீர் வசதியினை பெற்றுக்கொள்வார்கள். இக்குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவுவதற்காக சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி ஊடாக நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பாக்கிஸ்தான் அரசு மற்றும் சிரச கம்மெத்த திட்டம் ஊடாகவும் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோய் அதிகமாக காணப்படும் பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டத்தினூடாக இதுவரை நாடு பூராகவும் 242 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 115,925 குடும்பங்கள் மற்றும் 81,316 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்