››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'அபி வெனுவென் அபி' திட்டத்தின் கீழ் யுத்த வீரரின் குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

'அபி வெனுவென் அபி' திட்டத்தின் கீழ் யுத்த வீரரின் குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

[2017/08/12]

'அபி வெனுவென் அபி' படைவீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு, யுத்தத்தின் போது உயிரிழந்த கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் உதய ஒவிடிகலவின் மனைவியிடம் அண்மையில் (ஆகஸ்ட்,11) கையளிக்கப்பட்டது. இவ்வீட்டினை இலங்கை கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, மறைந்த கடற்படை அதிகாரியின் மனைவியிடம் கையளித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து வசதிகளுடன் கூடிய இவ்வீடு, இலங்கை கடற்படை சிவில் பொறியியலாளர்களால் வேயங்கொட, பதுரகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

மறைந்த லெப்டினன்ட் உதய ஓவிடிகல 1985 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி இலங்கையின் கடற்படையின் 13 வது ஆட்சேர்ப்பு மூலம் கேடட் பயிலுனர் அதிகாரியாக கடற்படையில் இனைந்து கொண்ட அவர் 1995 ஆண்டு இடம்பெற்ற மோதலின் போது தாய்நாட்டுக்காக தன்னுயிரை தியாகம் செய்தார்.

இந்நிகழ்வில் மேற்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் மறைந்த கடற்படை அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்