››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் விநியோகம்

இராணுவத்தினரால் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் விநியோகம்

[2017/08/15]

அண்மையில் (ஆகஸ்ட், 12) இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பார்வை குறைபாடுடைய கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்புப்படை தலைமையாக இராணுவத்தினரால் தாமரைத் தடாக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு பார்வை குறைபாடுடைய 40 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அனுசரணையினை கொழும்பு விஷன் கெயார் நிறுவனத்தின் வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற நடமாடும் கண்சிகிச்சையின்போது சுமார் 200 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், முதற்கட்டமாக 40 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையாக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் விஷன் கெயார் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்