››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“இராணுவ -2017” எக்ஸ்போ கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

“இராணுவ -2017” எக்ஸ்போ கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2017/08/27]

அண்மையில் ரஷ்யாவின் “இராணுவ -2017” எக்ஸ்போ கண்காட்சி திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். சர்வதேச இராணுவ - தொழில்நுட்ப அமைப்புகளுக்கான இக்கண்காட்சி நிகழ்வானது இம்மாதம் (ஆகஸ்ட்) 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மொஸ்கோ தேசபக்தி கண்காட்சி நிலையத்தில் இடம்பெறுகிறது.

இவ்விஜயத்தின் போது, ரஷ்ய அதிகாரிகளினால் வரவேற்கப்பட்ட பாதுகாப்பு செயலாளர் அவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் இராணுவ தொழிநுட்பம் தொடர்பாக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட அவர்களது உற்பத்திகள் என்பவற்றை அவர்களுடன் இணைந்து பார்வையிட்டார். பின்னர் அவர் அலபினோ செயல் விளக்க பகுதியில் இடம்பெற்ற செயல் விளக்கங்களையும் அவதானித்தார்.

இக்கண்காட்சியின் போது, செயலாளர் அவர்கள் ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் திரு. அலக்ஸ்சான்டர் போமின் ஆகியோரிடையே உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது உயர் நிலை பாதுகாப்பு அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். மேலும், இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மத்திய சேவைகள், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ஜே எஸ் சீ- ரோசொபோர்ன் எக்ஸ்போர்ட் ஆகியவற்றின் மேலதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். அத்துடன் மொஸ்கோவில் உள்ள நூதனசாலையையும் பார்வையிட்டார்.

இதன்போது, மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஆர் எம் எஸ் சரத் குமார அவர்களும் இணைந்திருந்தார்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் பிரதான வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றாக இக்கண்காட்சி அமைகிறது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான ரஷ்ய பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உற்பத்திகளுக்கான வெளிநாட்டு நிறுவனங்கள், பிரசித்திபெற்ற ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையங்கள் உட்பட திட்டம் மற்றும் வடிவமைத்தல் நிலையங்கள் ஆகியன பங்குபற்றின.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்