››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மரணமல்லாத ஆயுதங்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு

மரணமல்லாத ஆயுதங்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு

[2017/09/02]

இலங்கை கடற்படையினருடன் இணைந்து அமெரிக்க பசுபிக் கட்டளைகளின் பல் துறை பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரிவவின் இரண்டாவது நிகழ்வான மரணமல்லாத ஆயுதங்கள் தொடர்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கு வெற்றிகரமாக நேற்று ( செப்டம்பர், 01) நிறைவுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த் நிகழ்வு கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்தமாதம் (ஆகஸ்ட்) 30ம் திகதி ஆரம்பமானது.

குறித்த மூன்று நாட்களைக்கொண்ட கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் பங்குபற்றியதுடன், சமாதான உதவி நடவடிக்கையின்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் பொதுவான களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதேவேளை, வெலிசர கடற்படை வளாகத்தில் கள முறைப்பயிற்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், 18 நாடுகளைச்சேர்ந்த 41 இராணுவ வீரர்களும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த 06 உறப்பினர்களும், இலங்கையின் முப்படை மற்றும் காவல்துரையின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்