››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை இராணுவத்தினரால் 20 கி.மீ நீளமான நீர்ப்பாசன கால்வாய் சுத்திகரிப்பு

இலங்கை இராணுவத்தினரால் 20 கி.மீ நீளமான நீர்ப்பாசன கால்வாய் சுத்திகரிப்பு

[2017/09/13]

இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டத்தினூடாக பண்டிவெட்டியாறு பகுதியிலுள்ள துணுக்காய் மற்றும் வவுனிக்குளம் ஆகிய விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் வகையில் 20 கி.மீ நீளமான நீர்ப்பாசன கால்வாய் அண்மையில் (செப்டெம்பர், 07) புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், சுமார் 700 இராணுவ வீரர்கள் உட்பட 200க்கும் அதிகமான பொதுமக்கள் குறித்த சிரமதானப்பணியில் (சுய உதவி) ஈடுபட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 40,000 ஏக்கர் கொள்ளளவு கொண்ட வவுனிக்குளத்தின் தெற்கு கால்வாயானது வயல் நிலங்களுக்கு நீரை எடுத்துச்செல்லும் பிரதான மூன்று கால்வாய்களில் ஒன்றாகும். துணுக்காய் பகுதிக்கு நீரை எடுத்துச்செல்லும் இக்கால்வாய் சேதமடைந்து காணப்பட்டதுடன் எதிர் வரும் பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதனை புனர்நிர்மாணம் செய்யும் வகையில் 65ஆவது படைப்பின் துருப்பினர் 09 விவசாய சங்க உறுப்பினர்களுடன் இணைந்து 20 கி.மீ நீளமான நீர்ப்பாசன கால்வாயினை புனர்நிர்மாணம் செய்துள்ளனர். சிறு மற்றும் பெரும்போக பருவ மழை காலங்களிலும் நீரினைப்பெற்று 2,650 க்கும் அதிகமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை இராணுவத்தின் குறித்த சமூக நல ஊக்குவிப்பு திட்டத்திற்கு பிராந்திய நீர்பாசனத்துறை மற்றும் அரச அதிகாரிகள் ஆகியன உதவிகளை வழங்கியுள்ளன.

இந்நிகழ்வில், 10ஆவது இலங்கை இலகு காலாள்படை வீரர்கள், 19ஆவது இலங்கை இலகு காலாள்படை வீரர்கள், 21 ஆவது (V) இலங்கை இலகு காலாள்படை வீரர்கள், 15 ஆவது (V) இலங்கை சிங்க படைப்பிரிவினர், 1 ஆவது கஜபா படைப்பிரிவினர், 11ஆவது கஜபா படைப்பிரிவினர், 20 ஆவது (V) விஜய பாகு படைப்பிரிவினர், மற்றும் 7 பிரிகேட் படைகளின் இலங்கை தேசிய காவற்படையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்