››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காமன்வெல்த் வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம்

பொதுநலவாய வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம்

[2017/09/23]

அண்மையில் நடைபெற்று நிறைவுற்ற 5 வது பொதுநலவாய வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியின் பல நிகழவுகளில், 8 ஆவது பொறியிலாளர் சேவை படைப் பிரிவை சேர்ந்த இலங்கை இராணுவ வலு தூக்கும் போட்டியாளர் பிரைவட் கே.கே.எச் தில்ஹார வெற்றி பெற்றுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த நிகழ்வு இம்மாதம் (செப்டம்பர் - 2017) 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு போட்ச்சப்ஸ்டரூமில் நடைபெற்றுள்ளது.

இதன்பிரகாரம் குறித்த போட்டியாளர், 83 கிலோ பிரிவுக்கான போட்டி, பாரம் தூக்குகும் பிரிவு மற்றும் பெஞ்ச் முறையில் பாரம் தூக்குதல் ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும், அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளான சிறந்த வலுதூக்கும் போட்டியாளர் மற்றும் டெட்லிப்ட் முறை ஆகிய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் சுவீகரித்துள்ளார்.

குறித்த போட்டியாளரை, தென்னாப்பிரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்கள் சந்தித்து தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்