››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மருத்துவ கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு

கிளிநொச்சி மருத்துவ கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு

[2017/09/27]

இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று அண்மையில் (செப்டெம்பர்,24) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சுகாதார அதிகாரி பணிமனைத்தொகுதி, இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 57, 65 மற்றும் 66 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் நிபுணத்துவம் மற்றும் உடல் உழைப்பு ஆகியவற்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கட்டிடத்தொகுதியின் நிர்மாணப்பணிகள் ஜெனீவாவை தளமாக கொண்ட எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா நோய்களுக்கு எதிரான உலகளாவிய நிதியத்தின் நிதியுதவியுடன் 8 மாதங்களுக்குள் இராணுவத்தினரால் நிறைவு செய்யப்பட்டன. குறித்த கட்டிடத்தொகுதியை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் கௌரவ. ராஜித சேனாரத்ன அவர்கள் திறந்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, நன்கொடை நிறுவன பிரதிநிதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், இதுபோன்ற மருத்துவ தேவைகளுக்காக இராணுவத்தின் நிபுணத்துவம் மற்றும் இராணுவ வீரர்களின் உடற் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மூன்று கட்டிடங்கள் வட்டுக்கோட்டை, ஊர்காவற்துறை மற்றும் மரதன்கேணி ஆகிய யாழ்குடா பகுதியில் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்