››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு

சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு

[2017/09/28]

முல்லேரியா கலபலுவெவயிலுள்ள மகா சங்க கோதம தபோவனய மடாலயத்தில் வசிப்பவர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் இன்று (செப்டம்பர், 28) மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இம் மடாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட திருமதி. வைத்தியரத்ன அவர்கள் மத அனுஷ்டானங்களை மேற்கொண்டதுடன், மடாலயத்தின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய மிதபாணி மகா தேரர் மற்றும் ஏனைய மகா சங்க உறுப்பினர்களுக்கும் “பிரிகர”வினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்