››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்

[2017/10/02]

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த பயிற்சி நடவடிக்கைகள் இம்மாதம் 02 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

1995ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட CARAT எனும் குறித்த பயிற்சி நடவடிக்கையின் ஊடாக, தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையே கடல்வழி பாதுகாப்பு முன்னுரிமைகளை பகிர்ந்து கொள்ளல், பயிற்சி நடவடிக்கையில் பங்கேற்கும் படையினருக்கிடையே இயங்குதன்மையை மேம்படுத்தல், கடற்படை கூட்டணியை நிலைத்திருக்கும் வகையில் அபிவிருத்தி செய்தல் என்பன இதன் பிரதான நோக்கமாக காணப்படுகிறது. மேலும், வலுவான உறவுகளை உருவாக்குவதன் ஊடாக தயார் நிலையை அதிகரித்து நம்பிக்கையை கட்டியெழுப்புதல். மேலும், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தி இடைநிலைத்தன்மை மேற்கொள்வதன்மூலம் இப்பயிசியில் பங்குகொள்ளும் பிராந்திய நாடுகளுக்கிடையிலான கடற்படைகளுடன் நெருக்கமாக பணியாற்ற வழிவகுக்கும்.

இதேவேளை, பல வருடங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இப் பயிற்சி கடல், நிலம், ஆகாயம் ஆகியவற்றில் பல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்