››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன

[2017/10/01]

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் சனியன்று (செப்டம்பர், 30) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன. இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இப்படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த படகுகள் காங்கேசன்துறைக்கு வடக்கே சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் அப்படகுககள் பழுதுபார்க்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படை கப்பலான “ரனவிக்ரம” வின் உதவியுடன் குறித்த படகுகள் வடக்கு சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் ‘அப்ஹீக்’ கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்