››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் வெற்றிவாகை சூடினர்

இராணுவ குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் வெற்றிவாகை சூடினர்

[2017/10/03]

அண்மையில் (ஒக்டோபர், 01) கண்டியில் இடம்பெற்ற குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் கலந்து கொண்ட குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் மூன்று வெற்றி கிண்ணங்களை தமதாக்கிக்கொண்டனர். விக்டோரியா கோல்ஃப் மற்றும் கண்ட்ரி ரிசோர்ட்டில் இலங்கை குதிரையேற்ற சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து முன்னணி குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்தின் குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியதன் மூலம் மூன்று வெற்றிகிண்ணங்களை வெற்றிகொண்டனர். இப்போட்டி, இரண்டரை கிலோமீட்டர்கள் கொண்ட தூரத்தை கொண்டதுடன் 10 பாய்ச்சல்கள் மூலம் 15 நிமிட நேர இடைவெளிக்குள் ஓடி முடிக்க வேண்டிய சவால் மிகுந்த போட்டியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்