››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி

[2017/10/15]

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கி வைக்கப்பட்ட போதைப்பொருட்களற்ற தேசத்தினை உருவாக்கும் தேசிய செயற்றிட்டத்திற்கு அமைவாக அனைத்து வழிகளிலும் போதைப்பொருட்களை அகற்றுவதற்கான செயற்றிட்டத்தை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையானது சட்டத்திற்கு முரணாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளை வெளிக்கொண்டுவந்தது அவற்றுக்கு எதிராக துரிதமான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கை கடற்படையினரால் 29.9 கிலோகிராம் ஹெரோயின், 1,466.5 கிலோகிராம் கேரளா கஞ்சா மற்றும் 3,219.7 கிலோகிராம் உள்நாட்டு கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 3 கிலோகிராம் ஹஷிஷ், 118 பாக்கெட்டுகள் மடானா மோடகா (பாலுணர்வு மாத்திரை), 33,286 வலி நிவாரணிகள், 8,660 சட்டவிரோத சிகரெட்டுகள், 128.45 கிலோகிராம் சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் 182 லிட்டர் சட்டவிரோத ஆல்கஹால் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், போதைப்பொருட்களுடன் 08 இந்திய பிரஜைகள் உட்பட 193 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சட்ட அமலாக்க அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்